ஜெனிவாவில் 28ஆம் திகதி இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை எதிர்வரும் 28ஆம் திகதி விவாதத்துக்கும் வாக்கெடுப்புக்கும் முன்வைக்கப்படும் என்று ஜெனிவா வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை தொடர்பாகத் தயாரிக்கப்படக் கூடிய புதிய பிரேரணை, 28ஆம் திகதி இறுதி சமர்ப்பணத்துக்கு வரும் வரை அங்கத்துவ நாடுகளின் விருப்பு வெறுப்புகள், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, மாறி மாறி திருத்தங்களுக்கு உள்ளாகும் எனவும் கூறப்பட்டது.