பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்துச் செய்வதற்கு ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு.
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும். அதன் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைப்பட்டுள்ள காலிமுகத்திடல் போராட்டச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாந்தோட்டை வரை ஆரம்பமாகியுள்ள கையெழுத்துப் போராட்டத்துக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது.
இந்தப் போராட்டத்தில் எமது கட்சியினர் நேரடியாகப் பங்கேற்பார்கள்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவோம் என்று அரசு நாடாளுமன்றத்தில் வாக்குறுதிகூட வழங்கியுள்ளது. எனினும், அதை மீறி அரசு செயற்படுகின்றது. இது நாட்டுக்கு நல்லதல்ல” – என்றார்.