இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் புதிய பிரேரணையை கொண்டுவரப்போகும் 7 நாடுகள்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆரம்ப வரைவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க பல நாடுகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, கனடா, மலாவி, வடக்கு மாசிடோனியா மற்றும் மொண்டினீக்ரோ ஆகியவை அந்த நாடுகளில் அடங்கும்.
இலங்கையில் சர்வதேச அதிகார வரம்பைப் பயன்படுத்துவதற்குத் தேவையான சட்ட மற்றும் பிற வழிகாட்டுதல்களை வழங்குவது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி குற்றம் செய்ததற்கான தெளிவான ஆதாரங்களைக் கொண்ட நபர்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்து வரைவுத் தீர்மானம் கவனம் செலுத்துகிறது.
இலங்கையில் மனித உரிமைகள் பலவீனமடைவதற்கு காரணமான பொருளாதாரக் குற்றங்களைச் செய்த அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த வரைவுத் தீர்மானங்கள் பரிந்துரைக்கின்றன என்று கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிராகப் பிரேரணை வரவேண்டும் இந்த ராஜபக்ஷ குடும்பத்தை கைது செய்து சொத்துகள் யாவற்றையும் பறிமுதல் செய்யவேண்டும் ரணில் ராஜபக்ஷ வையும் சேர்த்து