மனித உரிமை செயற்பாட்டாளர்களைச் சுதந்திரமாக செயற்படவிடுங்கள்! – வவுனியாவில் போராட்டம்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களை சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள் எனும் கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நீதிக்கான மக்கள் அமைப்பால் வவுனியா – குருமன்காட்டு சந்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மனித உரிமை செயற்பாட்டாளர்களைத் துன்புறுத்துவதை நிறுத்து, கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை, நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளைப் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
அமைதியாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த மக்கள் பங்கேற்றிருந்தனர்.
