பட்டதாரி நியமணத்தில் எமது உரிமை மீறப்பட்டுள்ளது – மாணவர்கள் கவலை

ஐம்பதாயிரம் பட்டதாரி நியமனங்களுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  ஒரே திகதியில் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்த போதும் குறிப்பிட்ட சிலரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டும் ஒரு தொகுதியினரின் விண்ணப்பங்கள் மாத்திரம் நிலுவையிலும் வைக்கப்பட்டுள்ளதாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ் விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  11. 07.2019 அன்று பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு மேலாக விடுகைப் பத்திரம்  வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஐம்பதாயிரம் பட்டதாரி நியமனங்களுக்காக விண்ணப்பிக்கும் போது மேற்குறித்த திகதியில் பட்டக் கல்வியைப் பூர்த்தி செய்த  அனைத்து மாணவர்களும் பீடாதிபதியின் கையொப்பமடங்கிய கடிதத்துடன் பரீட்சைப் பெறுபேறுகளையும் இணைத்து சமர்ப்பித்திருந்தனர்.
 அதில் பெரும்பாலானவர்கள் வேலைவாய்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ள போதும், குறிப்பிடப்பட்ட சிலருக்கு மாத்திரம் விடுகைப் பத்திரம் இணைக்கப்படாமல்  பீடாதிபதியின் கடிதத்துடன்  விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டதால் அவ் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரே திகதியில் பட்டக் கல்வியைப் பூர்த்தி செய்த அனைவரும் ஒரே மாதிரியான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்தபோதும் குறிப்பிட்ட சிலரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டும் ஒரு தொகுதியினரின் விண்ணப்பங்கள் நிலுவையிலும் வைக்கப்பட்டுள்ளன. இது  தங்களுடைய உரிமை மீறலாக கருதுவதாக விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.