அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு -கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பால் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், “மனித உரிமைகளுக்கு மதிப்பளி”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “பயங்கரவாத தடைச் சட்டதை நீக்கு”, “வடக்கு -கிழக்கில் மனித உரிமை காவலர்களை அச்சுறுத்துவதை நிறுத்து”, “அரசே மனித உரிமை அனைவருக்கும் சொந்தமானது” போன்ற பதாகைகளைத் தாங்கி நின்றனர்.