களனியில் துப்பாக்கிச்சூடு! – ஒருவர் பலி

தெற்கில் துப்பாக்கிச்சூட்டுப் படுகொலைகள் தொடர்கின்றன.
களனி – பட்டிய சந்தியில் இன்றிரவு (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர், குறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிஸ்ட்டல் போன்றதொரு துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.