பள்ளி வேனில் மாணவி உறங்குவதை கவனிக்காமல் கதவை மூடிய டிரைவர்… மூச்சு திணறி சிறுமி உயரிழந்த சோகம்

கேரள மாநிலம் கோட்டயம், சிங்கவனம் பகுதியை சார்ந்தவர் அபிலாஷ் சாக்கோ. இவர் கத்தாரில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். அபிலாஷ் சாக்கோ, சௌமியா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் இவர்களது இரண்டாவது மகளான வின்சா மரியம் ஜேக்கப் என்ற நான்கு வயது குழந்தை கத்தாரில் உள்ள கிண்டர் கார்டன் பள்ளியில் படித்து வருகிறார். தனது நான்காவது பிறந்தநாளன்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற குழந்தை பள்ளி பேருந்தில் உறங்கியுள்ளது.
இதை கவனிக்காத பேருந்தின் டிரைவர் வாகனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். கடும் வெயிலில் பள்ளி பேருந்திற்குள் மூச்சு விட முடியாமல் இருந்த அந்த நான்கு வயது குழந்தை, மயக்க நிலைக்கு சென்றுள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் வாகனத்தில் வந்து பார்த்த பள்ளி வேன் டிரைவர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அந்த நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
இதை குறித்து விசாரித்த கத்தார் அரசு, பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி வாகன டிரைவரின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி அதிரடியாக அந்தப் பள்ளியை மூடியுள்ளது.இந்த நிலையில் இன்று நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்த அந்த குழந்தையின் உடலை பெற்றோரின் ஆசைகளுக்கு ஏற்ப அவர்களது வீட்டின் முன்னால் அடக்கம் செய்யப்பட்டது. தனது நான்காவது பிறந்த நாளன்று மூச்சுத் திணறி பரிதாபமாக பலியாகி உள்ளது. இந்த குழந்தையின் உயிரிழப்பு கேரளாவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.