இலங்கைக்கு, இந்தியா புதிய நிதியுதவிகளை வழங்காது : ராய்ட்டர்ஸ் தகவல்

இலங்கைக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்க இந்தியா திட்டமிடவில்லை எனவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதிக்கு செலுத்துவதற்கு அன்னிய செலாவணி இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா மிகவும் உறுதுணையாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு இதுவரை 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாடு என்ற வகையில் தொடர்ச்சியாக உதவிகளை வழங்க முடியாது எனவும் இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இப்போது அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையைப் பொறுத்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் இந்த முடிவு ஆச்சரியமானதல்ல என்றும், இலங்கை அரசு வட்டாரங்கள் மூலம் இது குறித்து இந்தியா முன்னதாகவே “சிக்னல்” வழங்கியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.