கே.எஸ்.சிவகுமாரன் காலமானார்
மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
பெற்றோர்கள் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார். மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்த ஒரு பொக்கிசம். மிக அருமையான ஒரு மனிதர்.
இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தார். இலங்கை வானொலி தமிழ் தேசிய, வர்த்தக ஒலிபரப்புகளிலும், ஆங்கில சேவையிலும் 1960களில் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவராவார்.
30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
இலங்கை வானொலி தமிழ் தேசிய, வர்த்தக ஒலிபரப்புகளிலும், ஆங்கில சேவையிலும் 1960களில் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளரான கே. எஸ். சிவகுமாரனுக்கு சென்னையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் 2020 டிசம்பர்-2021 ஜனவரி காலப்பகுதியில் நடைபெற்ற ஆறாவது யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அன்னாரது மறைவு இலங்கை மக்களுக்கு ஓர் பேரிப்பாகும்.
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு , அவர்களது குடும்பத்தினருடன் , அவர்களது கவலைகளை பகிர்ந்து கொள்கிறோம்.
பிந்திய இணைப்பு வீடியோ