USAID லிருந்து 5 ஆண்டுகளுக்கு 65 மில்லியன் டாலர்கள்!
USAID நிர்வாகி சமந்தா பவரின் சமீபத்திய விஜயத்தின் அடிப்படையில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இன்று (16) இலங்கைக்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கு மேல்) வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் மாலத்தீவில் USAID மிஷன் பணிப்பாளர் கேப்ரியல் க்ரோ மற்றும் நிதி அமைச்சின், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட அபிவிருத்தி நோக்கங்களுக்கான உதவி ஒப்பந்தத்தின் (DOAG) கீழ் இந்த உதவி வழங்கப்படுகிறது.