தியாக தீபம் திலீபன் நினைவேந்தலின் 3ஆம் நாள் நிகழ்வு யாழ். பல்கலையில்!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இதன்போது ஈகச் சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.