ராஜபக்சக்கள் அனைவரும் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும்! சம்பிக்க வலியுறுத்து.

ராஜபக்சக்கள் அனைவரும் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று 43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது தவறுகளைத் திருத்திக்கொண்டு, ஜனநாயக வழியில் பயணிக்கத் தயாரில்லையெனில் அக்கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தால், போராட்டக்காரர்கள் இன்று வீரர்கள் ஆகியிருப்பார்கள். ஆனால் ஆட்சி கட்டமைப்பில் ராஜபக்சக்களின் ஆதிக்கம் இன்னும் இருப்பதால்தான் போராட்டக்காரர்கள் தண்டிக்கப்படுகின்றனர் எனவும் சம்பிக்க மேலும் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.