ரணில் பக்கிங்ஹாம் அரண்மனையில் சார்லஸை சந்தித்தார்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியாரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள லண்டன் வந்த உலகத் தலைவர்களுக்கும் , மூன்றாம் சார்லஸ் மன்னருக்குமான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவியான சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.