புகழ்பெற்ற ரஷ்ய விண்வெளி வீரர் மரணம்.
ரஷ்யாவின் புகழ்பெற்ற விண்வெளி வீரரும், விண்வெளி ஹீரோ என்று அழைக்கப்படும் வலேரி பாலியகோவ் (80) என்பவர், உடல்நலக் குறைவால் காலமானார். இந்த செய்தியை ரோஸ்கோஸ்மோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், ‘மருத்துவ மாணவராக இருந்த வலேரி பாலியகோவ், கடந்த 1972ம் ஆண்டு விண்வெளி வீரராக பயிற்சி பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிர் என்ற விண்வெளி நிலையத்திற்கு இரண்டு முறை பயணம் செய்தார். விண்வெளியில் அதிக நேரம் (437 நாட்கள்) பறந்தவர் என்ற சாதனையை படைத்தவர். மொத்தமாக 678 நாட்களை இவர் விண்வெளியில் கழித்துள்ளார். இவரது விண்வெளிப் பயணத்திற்கு பின்னரே, மனித உடல் எவ்வாறு விண்வெளிக்கு உகந்ததாக இருக்கிறது என்பதை கண்டறிய முடிந்தது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.