லண்டனில் ரணில் தங்கியிருந்த ஹோட்டல் முன் ரணிலுக்கு எதிராக போராட்டம்!
மகாராணியாரது இறுதி நிகழ்வுக்காக இங்கிலாந்து சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்கியிருந்த இன்டர்காண்டினென்டல் ஹோட்டலுக்கு முன்பாக, இலங்கையர்கள் சிலர் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அங்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தியதை காணமுடிந்தது.
ஒடுக்குமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சமூக ஆர்வலர்களையும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க , ராஜபக்ஷவின் பாதுகாவலர் என்றும் , அவர் ஏற்றுக்கொள்ள முடியாத ஆணை இல்லாத போலி ஜனாதிபதி என்றும் அவர்கள் கூறினர்.
இதேவேளை நேற்று (19) பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வங்குரோத்து நிலைக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி வளமான நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.