செப்டம்பர் 24, 25 ம் தேதி நடைபெற இருந்த தட்டச்சு தேர்வுக்கு நீதிமன்றம் தடை
தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் செப்டம்பர் 24, 25 தேதிகளில் நடைபெற உள்ள தட்டச்சு தேர்வுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு தேர்வு தேர்வு நடைபெறும். இந்த நிலையில் தற்போது தமிழக அரசு வெளியிடப்பட்ட தேர்வு அறிவிப்பில் தட்டச்சு தேர்வில் , தாள் -1 ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட், இரண்டாம் தாளில் (தாள் -2) ஸ்பீடும் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இது தொடர்பாக , கடந்த 2 மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தட்டச்சு தேர்வின் புதிய தேர்வு குறித்து தமிழக அரசின் அறிவிப்புக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தனி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர் பழைய முறைபடியே தேர்வு நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்த புதிய முறைபடியே தேர்வு நடத்த வேண்டும் என மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் R. மகாதேவன், J.சத்ய நாராயணா பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் , தமிழக அரசு தற்பொழுது நடைமுறைப்படுத்திய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்தினால் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்தினால் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது . உதாரணத்திற்கு கடந்த முறை , புதிய முறைபடி ர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி விதம் அதிகமாக இருந்தது. 85 சதவீதம் தேர்ச்சி இருந்தது. பழைய முறைபடி, 65 சதவீதம் தேர்ச்சி உள்ளது.
புதிய முறைபடி தேர்வு எழுதினால், மாணவர்கள் முதலில் கட்டுரை தட்டச்சு செய்கின்றனர். அதன் பிறகு மாணவர்கள் வேக தட்டச்சு தேர்வுக்கு ( SPEED TEST) க்கு இயல்பிலேயே தயாராகி விடுகின்றனர்.
ஆனால் பழைய நடைமுறைப்படி முதலாவது வேக தட்டச்சு (தாள்-1) நடந்தால் வந்தவுடனேயே வேக தட்டச்சு அடிப்பதில் பல காரணங்களால் மாணவர்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முதல் தாளான (SPEED TEST) தட்டச்சு தேர்வில் சிறப்பாக தட்டச்சு செய்ய முடியவில்லை என்ற காரணத்தினால், தாள் -2., கட்டுரை எழுதுதல் தேர்வில் பங்கேற்காமல் சென்று விடுகின்றனர்.
இதனால் தேர்ச்சி விகிதம் குறைகிறது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள புதிய முறைப்படி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.மனுதாரர் திறப்பு வழக்கறிஞர் கூறுகையில், கடந்த 75 ஆண்டுகளாக பழைய முறைப்படி தான் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுதான் மாணவர்களுக்கு எளிதாகவும் இருக்கும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார்.
இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் செப்டம்பர் 24, 25 ம் தேதிகளில் நடைபெற உள்ள தட்டச்சு தேர்வுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தேர்வு நடைமுறை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு பிறகு தட்டச்சு தேர்வு நடத்தலாம் என வும் கருத்து தெரிவித்து , வழக்கின் உத்தரவுக்காக 2 வாரங்கள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.