முல்லைத்தீவு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் தலைவருமான க.விமலநாதன் தலைமையில் இன்று(22) மதியம் 12.00மணிக்கு இடம்பெற்றது.
மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட சிபாரிசுகளின் அடிப்படையில் மாவட்ட பயன்பாட்டு குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது நீண்ட கால குத்தகையில் வர்த்தக நிலையங்கள் அமைந்த காணித்துண்டுகள், புதிய அரச வன பகுதியில் அமைந்த காணி துண்டுகளை நீண்ட கால குத்தகையில் வழங்குதல், தொலைந்தபொதுத் அல்லது உரிமைமாற்ற காணிக் கச்சேரி முன்மொழிவு, மாற்றி ஆவணம் வழங்குதல், ஆவணம் வழங்குதல், திணைக்களங்களுக்கு காணி கையளித்தல், பொதுத் தேவைக்கு பயன்படுத்தப்படும் காணிகளை கையளித்தல், நீண்டகால குத்தகையில் காணி வழங்குதல், காணிக் கச்சேரிக்கு அனுமதி வழங்குதல் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.