சம்பளம் கொடுக்க கூட பணமில்லை, IMF கெடுபிடியால் நோட்டு அச்சடிக்கவும் முடியவில்லை.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதிய வருமானம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரசாங்கம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் பண நோட்டுகளை அச்சடித்து சம்பளம் வழங்க முடிந்தது , சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக பண நோட்டுகளை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.