நாடாளுமன்றத்தில் திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரம் பாடிய சிறிதரன்!
நாடாளுமன்றத்தில் “நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி” என்னும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரம் சிவஞானம் சிறிதரன் எம்.பியால் உரத்துப் பாடப்பட்டது
நாடாளுமன்றத்தில் நேற்று திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சிறிதரனால் இந்தத் தேவாரம் உரத்துப் பாடப்பது.
தனது உரையை ஆரம்பிக்க முன்னர், ”தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற மாணிக்கவாசகரின் அருள்வாசகத்தைக் குறிப்பிட்ட பின்னரே, ”நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி” என்ற திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான தேவாரத்தை உரத்துப் பாடிவிட்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு அங்கு தற்போது இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் மிகவும் ஆவேசமான நிலையில் நீண்ட உரையை சிறிதரன் எம்.பி. ஆற்றினார்.
இலங்கையின் நீதித்துறையில் தமிழன் தீர்ப்பு வழங்கினால் செல்லாது; சிங்களவன் தீர்ப்பு வழங்கினால்தான் அது செல்லும் என்ற இனவாத சிந்தனையே குருந்தூர்மலை விவகாரத்தில் கையாளப்படுகின்றது என்றும், அனைத்து இடங்களிலும் தியானத்தில் இருக்கும் புத்தர் திருக்கோணேஸ்வரர் ஆலய மலையில் மட்டும் நிமிர்ந்து அமர்ந்திருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.