நாகர்கோயில் படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல்!
நாகர்கோயில் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசம் எங்கும் நடைபெற்றது.
பிரதான நிகழ்வு நாகர்கோயில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது
யாழ்., வடமராட்சி கிழக்கு – நாகர்கோயில் பாடசாலை மீது 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட புக்காரா விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் 22 மாணவர்கள் உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாகர்கோயில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களது உறவுகள் மற்றும் மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுது தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.