பிரசவத்தில் தாயின் இதயம் நின்ற போதும், 2 மணி நேரம் சிசேரியன் செய்த மருத்துவர்கள்!

இதயம் செயலிழந்த கர்ப்பிணித் தாய்க்கு இரண்டு மணி நேரம் செயற்கை இதயத் துடிப்பை அளித்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையையும் தாயையும் மருத்துவக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.
சிலாபம் பொது மருத்துவமனையின் மருத்துவக் குழுவே அவருக்கு இந்த அரிய அறுவை சிகிச்சையை செய்துள்ளது.
இந்த தாயார் மாதம்பை பகுதியின் கல்முலுவை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், கடந்த 20ஆம் திகதி இரவு 11.25 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அவரது இதயம் செயலிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இரு உயிர்களையும் காப்பாற்றுவது மிகவும் அரிதான நிகழ்வு என வைத்தியர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.