ஆப்கானிஸ்தானில் பள்ளி வாசல் அருகே குண்டுவெடிப்பு- பலர் பலி ?

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே இன்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதில் பலர் உயிரிழந்திருப்பதை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். நகரின் முக்கிய இடத்தில் குண்டுவெடிப்பு நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து, கரும்புகை வானுயரத்தில் எழுந்தது. காபூல் காவல்துறைத் தலைமையின் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் கூறுகையில், ” காபூலில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்தது. இதில் பலர் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
ஆனால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய எண்ணிக்கை குறித்து தகவல் தெரியவில்லை. மசூதிக்கு அருகில் உள்ள பிரதான சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சர் அப்துல் நஃபி தாகூர் தெரிவித்தார்.
குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். சம்பவ இடத்தில் போலீஸ் குழுக்கள் இருப்பதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தாகூர் கூறினார்.