அடுத்த பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன் படக்குழு.

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜெசிக்கா என்ற இரண்டாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலின் அறிவிப்பால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இப்படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.