சீனாவிடமிருந்து இலங்கைக்கு மருந்து.

இலங்கைக்கு மேலும் ஒரு புதிய தொகுதி மருந்து வகைகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.
650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து வகைகள் சீனாவினால் இலங்கை மக்களுக்கென வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர எதிர்வரும் மாதங்களில் மேலும் 5 பில்லியன் ரூபா பெறுமதியான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.