விமானப் படை கல்லூரி மாணவர் கொலை: 6 ஊழியர்கள் கைது

கர்நாடக மாநிலம் ஜலாஹள்ளி பகுதியில் இயங்கி வரும் விமானப் படை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த 27 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கல்லூரியின் ஆறு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அங்கித் குமார் ஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஏர் கமாண்டர், குரூப் காப்டன் மற்றும் விங் கமாண்டர் பொறுப்புகளில் இருப்பவர்கள்.