தருமபுரம் பகுதியில் வீடு புகுந்து வாள்வெட்டு

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் மதுபோதையில் வந்தவர்கள் வீடு புகுந்து நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பழனியாண்டி கோவிந்தகுமார் வயது-26, பழனியாண்டி சதீஸ்குமார் வயது-27 ஆகிய இருவரே காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள தர்மபுரம் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் இருவரை கைது செய்துள்ளதுடன், சம்பவ இடத்திலிருந்து தொலைபேசி ஒன்றையும் மீட்டிருக்கின்றனர்