நாமல் ஒழுங்கு செய்த கூட்டத்துக்கு, நாமலே சமூகமளிக்க முடியாத நிலை.
சூரியவெவ பிரதேசத்தில் 80 வீதமான சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது தொடர்பான ஊடகச் செய்திகளை கருத்திற் கொண்டு, அதிகரித்து வரும் போசாக்குக் குறைபாட்டிற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய நாமல் ராஜபக்ஷ தலைமையில் சூரியவெவ பிரதேச செயலகத்தில் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டுள்ளது.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்திருந்த கலந்துரையாடலில் பங்கேற்க சூரியவெவ மக்கள் அனுமதிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் வருவதை அறிந்து பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, நாமல் ராஜபக்ஷ , தாமே அழைத்த தொடர்புடைய விவாதத்தில் பங்கு கொள்வதை தவிர்த்துள்ளார்.