வடக்கில் 5 ஆண்டுகளில் 742 சிறுவர் துஷ்பிரயோகம்!
“வடக்கு மாகாணத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 742 சிறுவர்கள் பாலியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இளவயது கர்ப்பம் காரணமாக 49 சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.”
இவ்வாறு சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான துஷ்பிரயோக சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாகியுள்ளன.
2018ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 105பேரும், உடலியல் ரீதியாக 91 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2019ஆம் ஆண்டு 106 பேர் பாலியல் ரீதியாகவும், 65 பேர் உடலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக 118 பேரும், உடலியல் ரீதியாக 52 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பாலியல் ரீதியாக 123 பேரும், உடலியல் ரீதியாக 15 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் வரையில் பாலியல் ரீதியாக 59 பேரும், உடலியல் ரீதியாக 8 பேரும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.