காட்டு யானை தாக்கி இருவர் பரிதாபச் சாவு!

காட்டு யானை தாக்கியதில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் மாவட்டம், எப்பாவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
எப்பாவல பிரதேசத்தின் கெலேகம மற்றும் ரொட்டவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
58 மற்றும் 64 வயதான இருவரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.