எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார்! – அரசுக்குச் சஜித் அணி சவால்.

“நாட்டில் அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாட்டு மக்கள் ஜனாதிபதி (கோட்டா), பிரதமர் (மஹிந்த) ஆகியோரை விரட்டினர். காகத்தைக்கூட (பஸில்) விரட்டியடித்தனர். எனவே, தற்போது அமைந்துள்ள அரசானது, மக்கள் ஆணைக்கு முரணானது.
மக்களுக்கு அஞ்சுவதால்தான், தேர்தல்களை நடத்துவதற்கு அரசு நடுங்குகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது.
அத்துடன், ‘காகம் – யானை’ கூட்டணியே தற்போது நாட்டை ஆள்கின்றது. அதாவது, காகத்துக்கும் (மொட்டுக் கட்சி), யானைக்கும் (ஐக்கிய தேசியக் கட்சி) அரசியல் ரீதியில் திருமணம் முடிந்துவிட்டது” – என்றார்.