மாகாண விவசாயத்திணைக்களத்தின் வயல்விழா.
பிரதி மாகாண விவசாய திணைக்களம் முல்லைத்தீவின் வயல் விழா – 2020
“நிருத்திய தொழில்நுட்பத்தினூடாக பேண் தகு விவசாயத்தில் வயல் விழா” என்னும் தொனிப்பொருளில் பிரதி மாகாண விவசாய திணைக்களம் முல்லைத்தீவு ஏற்பாடு செய்துள்ள வயல் விழா 2020 ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 27.08.2020 வியாழக்கிழமை மு.ப 9.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விவசாயத்துறை எதிர் நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையிலான பயிற்செய்கை முறைகள், காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பாதுகாக்கப்பட்ட இல்லங்களில் பயிர் செய்தல், ஆராய்ச்சி தகவல்கள், விலங்கு வேளாண்மை, விவசாய இயந்திர மயமாக்கல், நீர்ப்பாசனம் மற்றும் மூலிகை வளர்ப்பு முதலான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இவ் வயல் விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் வயல் விழாவில் விவசாயிகள், விவசாயம் சார் உற்பத்தியாளர்கள், கமக்காரர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு துறையினர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இவ் வயல் விழாவானது இன்றும் (28.08.2020) காலை 8.30மணி முதல் மாலை 6.00மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.