பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொலைச் சந்தேகநபர் உயிரிழப்பு.

கம்பஹா – நெதகமுவ பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா – பஹலகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி வீடொன்றில் கொள்ளையிட்டு, நபர் ஒருவரைக் கொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
நெதகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரைப் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததால், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.