யாழில் டெங்கினை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
யாழில் டெங்கினை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்குடாநாட்டில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…..
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அண்மைய நாட்களில் 7 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சைக்காாக அனு மதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த வருடம் யாழில் 3 690 பேர் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்
இவ் வருடம் இன்றைய தினம் வரை 900 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருக்கிறார்கள்
இனிவரும் காலங்களில் மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகமாக காணப்படும் இதன் காரணமாக டெங்கு நோய்த் தாக்கம் அதிகளவில் யாழ்ப்பாணத்தில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது
யாழ்ப்பாண குடாநாட்டில் மழைநீர் தேங்கும் இடங்களில் டெங்கு தொற்றினைஏற்படுத்தக்கூடிய நுளம்பு பெருகும் அபாயம் காணப்படுகின்றது நீர் தேங்கும் இடங்கள் பிளாஸ்டிக் போத்தல்கள்,வெற்று ரின்கள் இளநீர் கோம்பைகள் மற்றும் திண்மக் கழிவுகளில் இந்த நுளம்புகள் பெருகக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன
டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வை மீண்டும் மிகவும் உக்கிரமாக செய்தல் அவசியம் கொரோணா நோய் தொற்று அச்சம் காரணமாக சோர்வடைந்து காணப்பட்ட எமது பிரதேசம் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு உற்சாகமாக பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது பெற்றோர்களும் உற்சாகமாக தமது வேலைகளுக்கு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது
அடிக்கடி மழை பொழிகின்ற போது இந்த டெங்கு நோய்க்கிருமி நுளம்பு மூலம் தொற்றலாம் குறிப்பாக காலை வேளைகளிலும் சூரியன் அஸ்தமிக்கும் வேளைகளிலும் நோய்க்கிருமி பிள்ளைகளை கடிக்கும் பொதுவாக பாடசாலைகள் டியூஷன் சென்டர்கள் போன்ற இடங்களில் இந்த நோய் நுளம்பு கடிப்பதன் மூலம் நோய்க்கிருமி பரவக் கூடிய சந்தர்ப்பம் உண்டு
நுளம்பு கடிப்பதை தடுப்பதற்கு சுற்றுச்சூழல் மிகவும் சுகாதாரமாக இருத்தல்வேண்டும்
அதாவது பிள்ளைகளுக்கு நுளம்பு கடிக்காதவாறு பாதுகாக்க வேண்டும்
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நுளம்பு கடிக்காத வண்ணம் தமது சுற்றுச்சூழலைப் பேணிப்பாதுகாக்கவேண்டும்
டெங்கு நோயின் அறிகுறியாக காய்ச்சல் காணப்படும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்படுமேயானால் நீங்கள் கட்டாயமாக வைத்தியசாலைக்கு சென்று குருதிப் மேற்கொள்ள வேண்டும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் டெங்கு சிகிச்சைக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் உள்ளது அதுபோல டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால் அதிக அளவு நீராகாரம் எடுப்பதன் மூலமே டெங்கி லிருந்து குணமடைய முடியும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு இத்தருணத்தில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் இதற்கு பொது சுகாதார அதிகாரிகளிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பற்றைகளை வெட்டாதிருத்தல்போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றார்.