தேசபக்தர்களின் சீன நேசம்… : ~ பிரியஷாந்த ராஜபக்ஷ
விமல் வீரவங்ச, அநகாரிக தர்மபாலவிற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் பழங்குடித் தீவாக மாற்றுவதற்குத் தேவையான சித்தாந்தத்தை நிறுவுவதற்கும் தயாரிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் உழைத்தவர்.
ஜே.வி.பி. , வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட தேர்தலில் , ஜே.வி.பிக்கு முப்பத்தெட்டு ஆசனங்களைக் கொண்ட பெரிய வாக்காளர் தளத்தை வெல்ல முடிந்தது.
அவ்வேளையில் ஜே.வி.பிக்கு அவ்வளவு பெரும் தொகை வாக்குகள் வீழ்ந்தது வேறு எதனாலும் அல்ல, வீரவன்சவின் தமிழ் விரோத இனவாத சந்தைப்படுத்தல் (மாக்கட்டிங்) ளையாட்டினால் தான்.
அடுத்து அந்த இனவாத சந்தைப்படுத்தல் விளையாட்டை வீரவன்ச , மஹிந்தவிடம் கொண்டு சென்றார்.
அத்தோடு ஜே.வி.பியின் வாக்காளர் அடித்தளம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்தது.
ஜே.வி.பி அத்தோடு நிற்கவில்லை. ராஜபக்சே முகாமுடனான போட்டிக்காக தமிழர் எதிர்ப்பை மார்க்கட்டிங் செய்யத் தொடங்கியது.
எவ்வாறாயினும், இந்த விளையாட்டு யுத்தம் , சுமார் இருநூறு பில்லியன் டொலர்களை அழித்து , வடக்கில் இலட்சக்கணக்கான தமிழ் உயிர்களையும் அழித்ததுடன் முடிந்தது.
ராஜபக்சேக்கள் என்போர் அதிகாரத்தையும் , செல்வத்தையும் வெறித்தனமாக துரத்துகின்ற சித்தாந்தம் இல்லாதவர்கள் முட்டாள்களின் கூட்டமாகும் .
வீரவன்ச தலைமையிலான கம்மன்பில, பாட்டலி மற்றும் பலர் ராஜபக்சவின் வெற்றுக் கருத்தியல் இடத்தை பழங்குடித்தனத்தால் நிரப்பினர்.
மகிந்தவின் விஞ்ஞாபனத்தின் பெயர்தான் மஹிந்த சிந்தனை என்றாலும் அந்த எண்ணங்கள் தெளிவாக விமலுடையது. அதுமட்டுமின்றி, மஹிந்த சிந்தனை என்ற பெயரையும் விமல்தான் பரிந்துரைத்தார்.
88, 89ல் மனித உரிமைக்காக ஜெனிவா சென்ற ஒரு பாத்திரம்தான் மஹிந்த. யுத்தம் எனது முறையல்ல என மஹிந்த முதலில் கூறினார்.
ஆனால் அதிகாரம் என்ற காரணிக்கு முன்னால் மகிந்தவின் எந்தச் சாதனையும் தோற்றுப்போய் வீரவன்சவின் கோத்திரவாதம் ராஜபக்சவின் சித்தாந்தத்தில் முன்னணிலையாக மாறியது.
இங்கு மகிந்த செய்த மிகக் கடுமையான தவறு வீரவன்சவின் இனவாதத்திற்கு உயிர் கொடுத்து , அதனை நாட்டின் தேசியப் பார்வையாக மாற்றியதுதான்.
உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி மாதிரிகளின் இந்த சகாப்தத்தில், பழங்குடியினர் மட்டுமே தேசிய தன்னிறைவு பொருளாதாரத்தை பராமரிக்க முடியும். இன்று வாழ்வதற்கு, குறைந்தபட்சம் பழங்குடியினரால் கூட அத்தகைய வரம்புக்குள் வாழ முடியாது.
விமல் , ஜே.வி.பி. நாட்டில் இருக்கும் போது கொண்டு வரப்பட்ட “எங்களுடையதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்” மற்றும் “சூரிய சிங்க சின்னம்” போன்ற தனித்துவப் பிரச்சாரங்கள் உலகளாவிய பொருளாதார உண்மையை மறைத்து ஒரு தவறான தேசியவாத யதார்த்தத்தை மிகைப்படுத்தும் முயற்சியாகும்.
பெரும் சமுதாயம் இனவாதம் என்றால் , குரூர அரசியல்வாதியும் இனவெறி கொண்டவனாக மாற்றம் பெறுவது , அவன் வாழ்வதற்கு பெரிய சமூகம் முக்கியம் என்பதால்தான். அதுதான் விமலின் குரூரத்தின் ஆரம்பம்.
இனப்படுகொலைப் போருக்கான உள்கட்டமைப்புகளை வழங்கிய “தேசபக்தி தேசிய இயக்கம்” மற்றும் ” மாநெல் (லில்லி) மலர் இயக்கம்” போன்ற குரூரத்தனமான அமைப்புகள் அந்த எண்ணத்தில் விமல் வட்டத்தில் உருவாகின…
வீரவன்சவின் வாழ்க்கை வரலாறு எந்த வகையிலும் வரலாற்று விபத்து அல்ல. அவர் நாற்றமடிக்கும் சமூக உடலின் ஒரு அங்கப் பழம். உள்ளே இருக்கும் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட அரசியல் உருவம் இது. மேலும் அதில்தான் ஆபத்து இருக்கிறது. மேம்பட்ட நாகரீக சித்தாந்தங்கள் இந்த பூமியில் வளராததால், வீரவன்ச மாதிரியான பழங்குடி பிற்போக்குத்தனமான எண்ணங்கள் இந்த பூமியில் எளிதாகவும் விரைவாகவும் வளர்கின்றன.
இங்கே நாம் கவலைப்பட வேண்டியது, உலகமயமாக்கலுக்கு எதிராக, ஐ.எம்.எஃப். என்பது ஒரு பேய் என இந்த பழங்குடி தேசபக்தர்கள் தியாகத்தை காட்டி இலங்கையை எந்த நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறார்கள் என்பதிலிருந்துதான்?
உறுப்பு நாடுகளுக்கு மேற்கத்திய கடன் ஆதாரங்கள் வழங்கும் கடன் வசதிகள், கடன்களை திருப்பிச் செலுத்துவதையும், கடன்களை திறம்பட பயன்படுத்துவதையும் உறுதிசெய்யும் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டது. ஆனால் பாசிச பொருளாதார உத்திகளைப் பின்பற்றும் சீனா போன்ற நாடுகளில் கடன் ஆதாரங்களின் நடத்தை வேறுபட்டது.
அவர்கள் கடனைக் கொடுக்கும்போது கொடுக்கும் போது கொடுத்த கடன் திறம்பட பயன்படுத்தப்படுகிறதா என அவர்கள் பார்ப்பதில்லை. (உதாரணம்:-தாமரை கோபுரக் கடன், அம்பாந்தோட்டை சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கான கடன்) இந்தப் பின்னணியில், சீனக் கடன் கொடுக்கல் வாங்கலில்தான் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் ஊழல் நடந்தேறியுள்ளன.
கடனாளியை திருப்பிச் செலுத்த முடியாத கடன் வலையில் சிக்க வைப்பதே சீனாவின் நீண்ட கால உத்தி. உலகின் பெரும்பாலான கடன் ஆதாரங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகைக் காலத்திற்குள் மறுசீரமைப்பு செய்ய விருப்பம் தெரிவித்திருக்கலாம், ஆனால் சீனா அவ்வாறு செய்ய விருப்பம் தெரிவிக்கவில்லை. மாறாக இலங்கை தம்மிடம் பெற்றுக்கொண்ட கடனை அடைக்க வர்த்தக வட்டியில் இலங்கை மீது மேலும் கடனை திணிக்க முயற்சிக்கின்றனர்.
கடனை ஈடுகட்ட துறைமுகம், விமான நிலையம் தவிர வேறெதுவும் இல்லாத இலங்கை போன்ற பலவீனமான அரசு இலங்கையில் சில இடங்களை தமது பிராந்திய அதிகார அரசியலின் மையமாக ஆக்கிரமிக்கும் அபாயத்தையும் நாம் எதிர்நோக்குகிறோம்.
இங்கு அதிகாரத்தை கைப்பற்றி யுவான் கமிஷன் மூலம் தங்கள் பைகளை நிரப்ப முயலும் தேசபக்தி துருவ திருடர்கள் மற்றும் சீனாவின் நயவஞ்சக அதிகார அரசியலின் நலன்கள் ஒன்றோடொன்று ஒத்துப்போகலாம். இதன்படி, கொள்ளையடிக்கும் சீனாவின் அடுத்த இலங்கை தரகர் பாத்திரத்தை வகிக்கும், வீரவன்சவின் பிரச்சாரம் எதிர்கால நடவடிக்கைக்கு பெரும் வாய்ப்பாக மாறலாம்.
~ பிரியஷாந்த ராஜபக்ஷ