மாணவியை துடைப்பத்தால் தாக்கிய பாடசாலை அதிபருக்கு இடமாற்றம்!
நுவரெலியா கொட்டகலை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அந்த பாடசாலையின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, சம்பந்தப்பட்ட அதிபர் துடைப்பத்தால் அடித்ததாக புகார் எழுந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் தற்போது பிராந்திய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வடமாகாண ஆளுநர் லலித் யு. கமகே தெரிவித்தார்.