நாடுமுழுவதும் மேலும் 3,375 பேருக்கு கொரோனா : இன்றைய நிலவரம் இதோ!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,375 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 375 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,45,94,487 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,673 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 5,069 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,28,370 ஆக உயர்ந்துள்ளது.
Read More: மார்பகபுற்றுநோய் தொடர்பாகக் கூறப்படும் 5 கட்டுக்கதைகளும், உண்மைகளும்…
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதும் 2,18,75,36,041 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.