விருதுகள் பல பெற்ற இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார் (பிந்திய இணைப்பு)
இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.
நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலமாகும் போது அவருக்கு 41 வயது ஆகும்.
இலங்கை திரைத்துறையில் மிளிர்ந்து விளங்கிய தமிழ் கலைஞரான அவர், பல தமிழ் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களோடு பணியாற்றி இலங்கை தமிழ் திரைத்துறை வளர்ச்சியிலும் பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை அவரது சொந்த ஊரான ரக்குவானையில் நடைபெற உள்ளது.
அவரது உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் திடீர் மாரடைப்பு காரணமாக இன்று (02) காலை காலமானார்.
காலை 6.30 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தர்ஷன் தர்மராஜ் இறக்கும் போது அவருக்கு வயது 41.
சரோஜா, பிரபாகரன், மச்சாங், மாதா, இனியவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், பல சிங்கள நாடகங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிகவும் பிரபலமான “சுனாமி” திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் இன்றும் 05 நாட்களில் திரையிடப்படவுள்ள “பிராண” படத்திற்கும் தனது நடிப்பில் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தர்ஷன் தர்மராஜ் பல திரைப்பட விழாக்களில் தனது நடிப்புத் திறமைக்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார், மேலும் தெரண திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.
பிந்திய இணைப்பு
கொழும்பு தனியார் மலர்சாலையிலிருந்து இன்று (03) மாலை இறக்குவானை பகுதியிலுள்ள அன்னாராது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இன்று முதல் நாளை மறுதினம் (05) மாலை 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது பூதவுடல் வீட்டில் வைக்கப்படும்.
அதனை தொடர்ந்து தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் எதிர்வரும் 5ம் திகதி மாலை 5 மணிக்கு இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படும்.