புதிய அமைச்சரவையின் பின்னரே மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்கு இணைத் தலைவர்கள் நியமனம்!

“அமைச்சர்கள் சிலர் விரைவில் பதவியேற்கவுள்ளனர். அதன் பின்னரே 25 மாவட்டங்களுக்குமான , மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்படுவார்கள்.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் நியமனம் தொடர்பில் பிரதமரிடம் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
“அமைச்சர்கள் சிலர் விரைவில் பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சரவை அமையப்பெற்ற பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். விரைவில் அவை நடைபெறும்” – என்று பிரதமர் குறிப்பிட்டார்.