ஜெனிவாவில் இலங்கை படுதோல்வியை சந்திக்கும் அறிகுறிகள் தென்படுகிறது?
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையை தோற்கடிக்கும் திறன் இலங்கைக்கு முற்றிலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய ஊகங்களின்படி, தீர்மானத்திற்கு எதிராக அதாவது இலங்கைக்கு ஆதரவாக ஆறு நாடுகள் மட்டுமே வாக்களிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது அமெரிக்கா – இங்கிலாந்து – கனடா – ஜேர்மனி – மலாவி – மொன்டனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள்.
அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, லிச்சென்ஸ்டைன், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா, ஸ்வீடன், கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இப்போது தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளன. ,
பாரம்பரியமாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த ரஷ்யா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளன.
இந்தியாவும் நேபாளமும் வாக்களிப்பதை தவிர்த்து ஒதுங்கி நிற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒக்டோபர் 6 அல்லது 7ஆம் திகதி வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளார்.