காலியில் ரயிலில் மோதி இளைஞர் சாவு!

பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் காலி மாவட்டம், ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயரத்ன மாவத்தைப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
காலியில் இருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்ட இளைஞர் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மரணித்தார்.
கம்மத்தேகொட, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.