நாடாளுமன்றில் ரணில் வியாழக்கிழமை விசேட உரை!

நாட்டின் சமகால பொருளாதார நிலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி ஆற்றவுள்ள உரை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சமகால பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு குறித்தும் ஜனாதிபதி தனது விசேட உரையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.