பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை! – களனியில் பதற்றம் (Video)

களனியில் இன்று மாலை அரசுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
தற்போதைய அரசுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்கக் கோரியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
களனி – தலுகம பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொலிஸாரின் தடையை மீறிச் செல்ல முற்பட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.