ஹிமாச்சலில் இன்று (அக்.5) எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று (புதன்கிழமை) ஹிமாச்சல் செல்கிறார்.
பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்துவைக்கும் அவர், ரூ.3,650 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றுகிறார். மேலும், அங்கு தசரா கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
247 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,470 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை 18 சிறப்பு மற்றும் 17 சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், 18 சிறப்பு ஆபரேஷன் தியேட்டர்கள், 750 படுக்கைகள், 64 ஐசியு படுக்கைகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனையாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ல் பிரதமர் மோடி இந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.