ஜெனிவாவில் இலங்கை கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே காரணம்! – வாசு குற்றச்சாட்டு.
“ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்.”
இவ்வாறு அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
எனினும், இலங்கை மீதான ஜெனிவாத் தீர்மானங்களை தாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ராஜபக்சக்களின் தான்தோன்றித்தனமான சில முடிவுகளால் நாடு இன்று படுகுழியில் விழுந்துள்ளது.
ராஜபக்சக்களின் சகாவான ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டை மீட்டெடுக்க முடியாது.
மக்கள் ஆணை மூலம் புதிய அரசை நிறுவினால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும்” – என்றார்.