நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சனத் நிசாந்தவுக்கு அழைப்பாணை.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
அதில், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக காரணம் காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சருக்குத் தண்டனை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.