தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெளுத்து வாங்கப்போகுது மழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 4 நாட்களுக்கு பரவலாக கன மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் ஒங்கோல் அருகே வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகன்று வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்மலை, வேலூர், விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் வருகிற 9 ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.