ஜெனிவா வாக்கெடுப்பில் இலங்கை தோல்வி! ஐ.நாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது!
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது!
பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகள்! இலங்கைக்கு 7 வாக்குகள்!
20 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து புறக்கணிப்பு!
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானம் 13 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 07 வாக்குகளும் கிடைத்தன.
மேலும், 20 உறுப்பு நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து விலகின.
கடந்த முறை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது இலங்கைக்கு ஆதரவாக 11 வாக்குகள் கிடைத்தன.
ஆனால் இம்முறை அது 7 ஆக குறைந்துள்ளது.
இம்முறை இந்தியாவும் ஜப்பானும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.