பாலத்திற்காக உடைக்கப்பட்டது கல்வெட்டு
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்திற்கு உட்பட்ட நாகேந்திரபுரம் கிராமத்தில் கடந்த 2013.10.04 அன்று வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்சார விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போது அங்கு நிறுவப்பட்டிருந்த பெயர் கல்வெட்டு ந கரைச்சி பிரதேச சபையினரால் இடிக்கப்பட்டுள்ளது என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்டதன் காரணமாகவே அவை இடித்து வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என்றும் பொது மக்களில் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாகேந்திரபுரம் பிரதான வீதியில் மின்மாற்றி காணப்படுகின்ற இடத்திற்கு அருகில் குறித்த கல்வெட்டு காணப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு அன்மையாக கரைச்சி பிரதேச சபையால் சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாலம் அமைக்கும் பணியின் போதே இடையூறு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது எனவும் பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்