மாத்தளையில் வெட்டுக்காயங்களுடன் வீடொன்றுக்குள் ஆணின் சடலம்!

மாத்தளை மாவட்டம், நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லேனமிய பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் இருந்தே இந்தச் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகப் பொலிஸாரால் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.